நாலு வரைபடத்தை வைத்து வாங்கி விற்பது.
இணை கோடு, கம்பத்திலுள்ள கொடி, பிடியோடு உள்ள கப், இரு முறை தரை தட்டல் என்ற நான்கு வகையான வரைபடம்.
எனக்கு பிடியோடு உள்ள கப்பும் கம்பத்திலுள்ள கொடியும் தான் அதிக நம்பகத்தன்மை உள்ளதாக தெரிகிறது. இருமுறை தரை தட்டல் நம்மை ஏமாத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது மூன்றுமுறை தரை தட்டலாக மாறலாம் அது நமக்கு தெரியாது. பச்சை நிற கோடு தான் பிச்சிக்கிட்டு பங்கு விலை மேல போவதை காட்டுவது. மெல்லிய கருப்பு கோடு இந்த இடத்திலிருந்து பங்கு மேலே போகும் என்பதை காட்டுவது.
இணை கோடுகள் சிறப்பானது என்றாலும் சரியாக ஆதரவு தடை கோடுகளை வரையனும் அப்ப தான் தடையை மீறி பங்கின் விலை செல்கிறதா என அறியமுடியும்.
மெல்லியதா கருப்பு கோடு கப்பிலும் கொடியிலும் போட்டிருக்கேன் இல்லையா அதை விட சில சென்ட்டு அதிகமா வைத்து வாங்க சொல்லி விட்டு விடனும் அந்த அளவுக்கு மேல் வந்தா விலை குறைந்தது சில நாள்களுக்கு ஏறும் என நம்பலாம் சில முறை நல்லா ஏறி பின் இறங்கும். அப்ப அப்ப SLஐ மேல ஏத்தி பாதுகாப்பா இருக்கனும்.
விலை பிச்சிக்கிட்டு போகும்(பச்சை கோடு) போது Volume அதிகரிக்கும் ஏன்னா பில்லியன் கணக்கில் பணம் வைத்துள்ள Institutional buyer (Hedge fund, Mutual fund,Pension fund, ETF) நிறைய வாங்க ஆரம்பிப்பாங்க. அவங்களுக்கு தெரியும் எப்ப வாங்கனும் என்று. நாம அவங்கள விடாம புடிச்சிக்கனும். அவங்க பணத்தை சும்மா வைத்திருக்க முடியாது அது நாம் பங்கை வாங்க சிறந்த நேரம். விற்பதும் அது போலவே.
ஊசல் வணிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊசல் வணிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 5 செப்டம்பர், 2019
ஊசல் வணிகம் இரு உத்திகள் இன்வெசுட்டோபீடியா
இன்வெசுட்டோபீடியா கூறியது
உத்தி 1
ஏழு நாள் இடைவெளி.
S&P 500 அல்லது Russel 2000 குறியீட்டில் உள்ள பங்குகளையோ அல்லது ETFஐ யோ எடுத்துக்கொள்ளுங்கல்.
200 எளிய நகரும் சராசரிக்கு (200 SMA) மேல் அப்பங்கு இருக்க வேண்டும்.
ஏழு நாட்களில் மிகக் குறைவான விலை உள்ள அடுத்த நாள் சந்தை தொடங்கினதும் வாங்கி விட வேண்டும் .முதல் நாள் இரவே வாங்கு என்று வர்த்தகரிடம் (வணிக தளம் என்றால் அதனிடம்) ஆணை கொடுத்து விட வேண்டும்.
ஏழு நாள்களில் என்று அதிகமான விலையில் முடிகிறதோ அதற்கு அடுத்த நாள் சந்தை தொடங்கினதும் விற்று விட வேண்டும் (முதல் நாள் இரவே விற்க என்று வர்த்தகரிடம் ஆணை கொடுத்தும விட வேண்டும்)
இந்த உத்தியின் வெற்றி 74.9% என்கிறார்கள்.
ஆண்டு சராசரி கிடைக்கும் வருமானம் 8.92% வாங்கு வைத்திரு என்பதில் 7.23% தான் கிடைக்குதாம்.
- Buy when close < Lowest (low, 7[-1] and close >MA(200)
- Sell when close > Highest (close, 7 ) [-1] Note : it is Close not highest of high.
- Stop Loss 20%
- [-1] means 1 day ago
உத்தி 2
முதல் நாள் முடிவில் இருந்து தள்ளி இடைவெளியுடன் அடுத்த நாள் தொடங்குவது.
Long, Short என்று இரண்டு உண்டு.
விலை ஏறும் என்று நினைத்து பங்கை வாங்கினால் அது நெடுக்க (Long) வணிகம்.
விலை குறையும் என்று நினைத்து பங்கை வாங்கினால் (இல்லாத பங்கை விற்பது) அது குறுக்க (short) வணிகம்
LONG - கீழ் இடைவெளி வந்தால் அடுத்த நாள் முந்தின நாள் கீழ் விலையில் வாங்கு.
SHORT - மேல் இடைவெளி வந்தால் அடுத்த நாள் முந்தின நாள் மேல் விலையில் வாங்கு (விற்க) அதாவது இல்லாத பங்கை விற்கவும்.
For Long and Short 20% என்பது STOP LOSS
வரவு வரும் முதல் வாய்ப்பில் விற்று வரவைப் பார்க்கவும்
இந்த உத்தியின் வெற்றி 90% இக்கும் மேல் என்கிறார்கள்.
புதன், 4 செப்டம்பர், 2019
ஊசல் வணிகம் - உத்தி 01
- ஒத்த நிறுவன வலிமையை பார்க்கனும் (Relative strength NOT RSI) விப்ரோ-இன்போசிசு எக்சான்-செவ்ரான் வால்மார்ட்-டார்கெட் எந்த நிறுவனத்தோட ஒப்பிடறதுன்னு தெரியலையா S&P 500 குறியீடு (Index) SPX அல்லது துறை குறியீடு Index அல்லது துறை ETF உடன் ஒப்பிடவும்.impactopia.com/ என்ற தளத்தை ஒத்த நிறுவன வலிமை பங்குகளை அதாவது correlation உள்ள பங்குகளை அறிய பயன்படுத்தலாம். இது இலவச தளம்.
- வாரத்தில் ஐந்து பங்களைம வாங்குனா எல்லா பங்குகளும் ஒரு துறையை சார்ந்ததா இருக்கக்கூடாது.
- உந்தம் (Momentum) உள்ள பங்கைதான் வாங்கனும்,
- பொதுவா நெடுக்கம் Long தான் நன்கு அறிந்தால் குறுக்கமும் Short செய்யலாம்
- ஒரு வழிமுறை அல்லது விதியை உருவாக்கி வரவோ நட்டமோ அந்த விதிப்படி தான் வணிகம் செய்யனும், உணர்ச்சி வசப்படுதலை இது கட்டுக்குள் வைக்கும், வணிகத்தில் உணர்ச்சி வசப்படுதல் எதிரி. அதுவும் பங்கு வணிகத்தில் மூச்.
- Stop-Loss ஐ பங்கை வாங்கும் போதே போட்டு விடனும். பங்கின் விலை குறைந்தால் நம் நட்டத்தை அது குறைக்கும். அதை செய்யாம பங்கு விலை ஏறும் என்று காத்திருப்பது சிறந்த உத்தி அல்ல. இதனால தான் விதியை வகுத்து அதன் படி செயல்படனும்
- எல்லா வணிகமும் வரவு அளிக்காது சில நட்டமாகக்கூடும், நட்டம் ஏற்பட்டால் துவண்டு விடக்கூடாது.
- இது நுட்ப அலசல் மற்றும் வரைபடத்தை வைத்து முடிவெடுக்கப்படுவது. அடிப்படை அலசல் இதற்கு தேவையில்லை
ஏகப்பட்ட உத்திகள் உள்ளது தெரிந்தவரை பகிர்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
IBD information to Buy to Sell etc
எhttps://www.investors.com/how-to-invest/when-to-sell-stocks/ When to sell stocks. https://www.investors.com/how-to-invest/how-to-buy-sto...
-
எhttps://www.investors.com/how-to-invest/when-to-sell-stocks/ When to sell stocks. https://www.investors.com/how-to-invest/how-to-buy-sto...
-
Assuming XYZ trading at 45 Directional price target 43. Buy to Open 44 PUT @2.38 2 Sell to open 43 PUT @1.67 Buy to Open 42 PUT @ 1.06 N...



