வியாழன், 5 செப்டம்பர், 2019

ஊசல் வணிகம் உத்தி -03 வரைபடம்

நாலு வரைபடத்தை வைத்து வாங்கி விற்பது.

இணை கோடு, கம்பத்திலுள்ள கொடி, பிடியோடு உள்ள கப், இரு முறை தரை தட்டல் என்ற நான்கு வகையான வரைபடம்.


எனக்கு பிடியோடு உள்ள கப்பும் கம்பத்திலுள்ள  கொடியும் தான் அதிக நம்பகத்தன்மை உள்ளதாக  தெரிகிறது. இருமுறை தரை தட்டல் நம்மை ஏமாத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது மூன்றுமுறை தரை தட்டலாக மாறலாம்  அது நமக்கு தெரியாது. பச்சை நிற கோடு தான் பிச்சிக்கிட்டு பங்கு விலை மேல போவதை காட்டுவது. மெல்லிய கருப்பு கோடு இந்த இடத்திலிருந்து பங்கு மேலே  போகும் என்பதை காட்டுவது.

இணை கோடுகள் சிறப்பானது என்றாலும் சரியாக ஆதரவு தடை கோடுகளை வரையனும் அப்ப தான் தடையை மீறி பங்கின் விலை செல்கிறதா என அறியமுடியும்.

மெல்லியதா கருப்பு கோடு கப்பிலும் கொடியிலும் போட்டிருக்கேன் இல்லையா அதை விட சில சென்ட்டு அதிகமா வைத்து வாங்க சொல்லி விட்டு  விடனும் அந்த அளவுக்கு மேல் வந்தா விலை  குறைந்தது சில நாள்களுக்கு ஏறும் என நம்பலாம் சில முறை நல்லா ஏறி பின் இறங்கும். அப்ப அப்ப SLஐ மேல ஏத்தி பாதுகாப்பா இருக்கனும்.


விலை பிச்சிக்கிட்டு போகும்(பச்சை கோடு)  போது Volume அதிகரிக்கும் ஏன்னா பில்லியன் கணக்கில் பணம் வைத்துள்ள Institutional buyer (Hedge fund, Mutual fund,Pension fund, ETF) நிறைய வாங்க ஆரம்பிப்பாங்க. அவங்களுக்கு தெரியும் எப்ப வாங்கனும் என்று. நாம அவங்கள விடாம  புடிச்சிக்கனும். அவங்க பணத்தை சும்மா வைத்திருக்க முடியாது அது நாம் பங்கை வாங்க சிறந்த நேரம். விற்பதும் அது போலவே.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IBD information to Buy to Sell etc

 எhttps://www.investors.com/how-to-invest/when-to-sell-stocks/   When to sell stocks. https://www.investors.com/how-to-invest/how-to-buy-sto...