- ஒத்த நிறுவன வலிமையை பார்க்கனும் (Relative strength NOT RSI) விப்ரோ-இன்போசிசு எக்சான்-செவ்ரான் வால்மார்ட்-டார்கெட் எந்த நிறுவனத்தோட ஒப்பிடறதுன்னு தெரியலையா S&P 500 குறியீடு (Index) SPX அல்லது துறை குறியீடு Index அல்லது துறை ETF உடன் ஒப்பிடவும்.impactopia.com/ என்ற தளத்தை ஒத்த நிறுவன வலிமை பங்குகளை அதாவது correlation உள்ள பங்குகளை அறிய பயன்படுத்தலாம். இது இலவச தளம்.
- வாரத்தில் ஐந்து பங்களைம வாங்குனா எல்லா பங்குகளும் ஒரு துறையை சார்ந்ததா இருக்கக்கூடாது.
- உந்தம் (Momentum) உள்ள பங்கைதான் வாங்கனும்,
- பொதுவா நெடுக்கம் Long தான் நன்கு அறிந்தால் குறுக்கமும் Short செய்யலாம்
- ஒரு வழிமுறை அல்லது விதியை உருவாக்கி வரவோ நட்டமோ அந்த விதிப்படி தான் வணிகம் செய்யனும், உணர்ச்சி வசப்படுதலை இது கட்டுக்குள் வைக்கும், வணிகத்தில் உணர்ச்சி வசப்படுதல் எதிரி. அதுவும் பங்கு வணிகத்தில் மூச்.
- Stop-Loss ஐ பங்கை வாங்கும் போதே போட்டு விடனும். பங்கின் விலை குறைந்தால் நம் நட்டத்தை அது குறைக்கும். அதை செய்யாம பங்கு விலை ஏறும் என்று காத்திருப்பது சிறந்த உத்தி அல்ல. இதனால தான் விதியை வகுத்து அதன் படி செயல்படனும்
- எல்லா வணிகமும் வரவு அளிக்காது சில நட்டமாகக்கூடும், நட்டம் ஏற்பட்டால் துவண்டு விடக்கூடாது.
- இது நுட்ப அலசல் மற்றும் வரைபடத்தை வைத்து முடிவெடுக்கப்படுவது. அடிப்படை அலசல் இதற்கு தேவையில்லை
ஏகப்பட்ட உத்திகள் உள்ளது தெரிந்தவரை பகிர்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக