திங்கள், 16 செப்டம்பர், 2019

Cloud stocks and Rule of 40

How to pick growth stocks?

Rule of 40 = revenue growth + profit margin . Negative is ok -15+27  = 42 same way -22 + -31 = 53 Using this metric, a company must have either rampant growth or some profits, but it can't lack both.

Twilio , Adobe Systems  and ServiceNow topped the fundamentals list using this method.

As for valuation, Cramer said valuations less than 10 times earnings are reasonable in this environment. Adding valuation to the mix, he concluded that only 11 cloud stocks made the cut. In addition to Twilio and Adobe, Five9  , Workday  , Salesforce.com   , Splunk  , RingCentral  , VMware (  , Zendesk  and Dynatrace are worthy of a spot in your portfolio





சனி, 14 செப்டம்பர், 2019

இதுவரை நான் புரிந்தது

புதிதாக ஏதாவது கற்றால் இந்த இடுகை இற்றைபடுத்தப் படும், அதனால் இது முழுமையானது அல்ல.
  • நமக்கும்  புரியும்படியான சில காட்டிகள்  போதும். எல்லா காட்டிகளும் ஏதோ ஒரு வகையில் சிறந்தவையே.
  • 2 அல்லது 3 காட்டிகளை தேர்ந்தெடுத்து அதையே எப்போதும் பயன்படுத்துங்கள். நிறைய காட்டிகள் குழப்பத்தை தான் தரும்.
  • ஏதாவது ஒரு உத்தி வகுத்துக்கொண்டு அதை மட்டும் பயன்படுத்துங்கள். இது சரியில்லையென்றால் வேறு உத்தி.
  • எத்தனை காட்டிகள் உத்திகள் என்றாலும் எல்லாம் எப்போதும் வெற்றி கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • Equityஇக்கு பதிலாக Commission இல்லா ETF ஐ பயன்படுத்துங்கள். 50, 100, 500 பங்குகளை வர்த்தகம் செய்தால் Commission மிச்சம் ஆகும் . அது பெரிய தொகை.
  • இரு வரைபட ஒழுங்கு பலனலளிக்கிறது. மற்றவற்றை பரவாயில்லை பிடியோடு உள்ள கப்பும் கம்பித்தில் உள்ள கொடியும் மற்றவற்றை விட சிறந்தது.
  • நாள் வணிகத்திற்கு VWAP and 7 or 9 EMA சிறந்தது
  •  SL என்பதை பங்கு வாங்கும் போதேபோட்டு விடனும். அது பாதிப்பை குறைக்கும். விலை ஏறினா  SLஐ அதிகப்படுத்தி விடனும்.
  • எத்தனை வணிகம் வெற்றி என பாருங்கள் எவ்வளவு லாபம் என மட்டும் பார்க்காதிர்.
  • உந்தத்திற்கு எதிராக வணிகம் புரிவது சிறந்தது அல்ல. 
  • வார இறுதியிலோ இரவு நேரத்திலோ வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் உலக நிகழ்வுகள் நடந்தால் அடுத்த நாள் அது பங்கு சந்தையில் எதிரொளிக்கும்.
  • உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டில்  5-6% மட்டும் ஒரு பங்கில் போடுங்கள் அதற்கு அதிகம் வேண்டாம். 2-3% சிறந்தது பங்கின் விலை குறைவாக இருந்தால்.
  • எந்தப்பங்கும் எப்போதும் மேல போய்க்கிட்டே இருக்காது, விற்று லாபத்தை எடுத்து நேரம் பார்த்து மீண்டும் வாங்குங்கள். எப்ப விற்பது என்பது கடினம் அதற்கு ஏதாவது விதியை வகுத்து பின்பற்றுங்கள்.
  • பங்குகள் பாண்ட்களுக்கு எதிராக தான் செல்லும்.  அதாவது பங்கு கீழ போனா பாண்டு மேல போகும்.
  • Dollar cost averaging என்னும் முறைப்படி மாதம் ஆனதும் ஒரு பங்கிலோ அல்லது இரு பங்கிலோ பணத்தை போடுங்கள் பங்கு மெதுவாக வளரும். சிறந்த Commission இல்லா ETF ஐ தேர்ந்தெடுத்து பணத்தை போடவும். இது சிறந்த பாதுகாப்பு அதிகமுள்ள முறை.
  • உங்கள் பங்கை 30 பங்குகள் DOW உள்ள குறியீட்டுடன் ஒப்பிடாமல் S&P 500 குறியீட்டுடனோ  NYSE குறியீட்டுடனோ ஒப்பிடவும்.NASDAQ  குறியீட்டுடன் வேண்டாம் ஏனென்றால் அது விலையில் அதிக ஏற்றத்தாழ்வு உடைய தொழில் நுட்ப பங்குகள் அதிகம் உள்ளது.
  • அதிகமாக வெப்பினாரில்  பயன்படுத்தப்படும் காட்டிகள் வேற எதுவும் காட்டப்படுவதில்லை என்றே கூறலாம். எல்லாமே உந்த காட்டிகள் தான்.
    • WILLIAN  %R
    • RSI
    • VORTEX
    • MACD
    • STOCHASTIC FULL OR SLOW
    • SMA
    • EMA
    • SL (Stop Loss) இக்காக ATR.
  •  விலைக்கும் காட்டிக்கும் இடையே Divergence இருந்தால் விரைவில் விலையின் போக்கு மாறும் என 95% கூறலாம். விலை கீழே போய்க்கிட்டு இருக்கும் போது காட்டி மேலே போனால். அதாவது விலையும் காட்டியும் மாறுபட்ட எதிர்எதிர் திசையில் விரிவாங்கி சென்றால்.
  • 1-2-3 உத்தியை பயன்படுத்தவும்
  • பிடியோடு உள்ள கப் , கம்பத்தில் பறக்கும் கொடி  உத்தியை பயன்படுத்தவும்
  • வலேகலா உத்தி நன்றாக உள்ளது.
  • 5 அல்லது 10 என்று முடிந்த வரை குறைவ்வான பங்குகளில்  கவனம் செலுத்துங்கள். நிறைய பங்குகளில் கவனம் போனால் கவனம் சிதறி எதையும் ஒழுங்காக கவனிக்கமாட்டோம்.
  • உந்தம் உள்ள நல்ல நிறுவன பங்குகளை  வாங்கி,  SL போட்டு விட்டு மாதம் ஒரு முறை அதை பார்த்தால் போதும்.
  • நிறுவனத்தின்  வரவு-செலவை அறிவிக்கும் முன்பு நிறுவனத்தின் பெரிய தலைகள் 1 வாரத்துக்குள் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறார்களா விற்கிறார்களா என பார்க்கவும். அப்படி நடந்தால் அது வரவு-செலவை அறிவித்த பின் பங்கின் விலை  எந்த திசையில் போகும் என்பதை உணர்த்தும்.
  • பங்கின் கொள்ளளவு எப்படி உள்ளது என பார்க்கவும், வாங்கல் அதிகமுள்ளதா விற்றல் அதிமுள்ளதா என பார்க்கவும், இது சிவப்பு பச்சை நிறத்தில் கொள்ளளவு குச்சியின் நிறம் உள்ளதை வைத்து அறியலாம். குச்சியின் நீளம் அதிகமிருந்தால் பெரும் முதலைகள் (Billion dollar hedge funds & pension funds) வாங்கியுள்ளன விற்றுள்ளன என அறியலாம். ஏனென்றால் பெரும்பாலான பெரு பண்டு நிறுவனங்கள் கணினி மயப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காட்டிகள் குறிப்பிட்ட இடத்தில் வந்தால் வாங்கு விற்க என நிரல் அடிப்படையில் செயல்படுகின்றன. 
  • உங்கள் விதிகள் அதாவது காட்டிகள் மதிப்பு இருக்கும் நிலை உள்ள கவனிப்பு பட்டியலை Check List உருவாக்கி கொள்ளுங்கள் அந்த நிபந்தனைகள்\விதிகள் காட்டிகள் மதிப்பு இருக்கும் நிலை எதிர்பார்த்த மாதிரி சரியாக இருந்தால் மட்டும் பங்கை வாங்கவும். 

BIG MOVES LOWER ODDS
SMALL MOVES BIG ODDS
Don't wait for long time,. get-out in few hours or days.



l

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நாள் வணிக உத்தி 01

3 மற்றும் 4 கோடு உத்தி
நாள் பூரா உட்கார்ந்து கணினிய (பங்கின் போக்கை) பார்த்து வாங்கனும் விற்கனும் என்ற தேவை இல்லை. காலையில் சந்தை திறந்ததும் 30 நிமிடம் இல்லைன்னா 1 மணி நேரம்.
BAR - கோடு

மூன்று கோட்டு உத்தி.

  1. முதல் கோடு பெரிய பச்சை அல்லது சிவப்பு
  2. இரண்டாவது சிறிய கோடு முதல் கோட்டு நிறத்துக்கு எதிர் நிறம். முதல் கோட்டின் பாதி அளவு கூட இது இருக்கக்கூடாது. இதை ஓய்வெடுக்கும் கோடு என்பார்கள்.
  3. மூன்றாவது கோடு முதல் கோட்டை விட கொஞ்சம் சிறியது. ஆனா முதல் கோட்டின் நிறமுடையது.

நான்கு கோட்டு உத்தி


  1. இதுக்கு இரு ஓய்வெடுக்கும் கோடுகள் இருக்கும். அவை இரண்டாவது மற்றும் மூன்றாவது கோடுகள்.
  2. முதல் கோடு பெரிய பச்சை அல்லது சிவப்பு.
  3. இரண்டாவது சிறிய கோடு முதல் கோட்டு நிறத்துக்கு எதிர் நிறம். முதல் கோட்டின் பாதி அளவு கூட இது இருக்கக்கூடாது. இதை ஓய்வெடுக்கும் கோடு என்பார்கள்.
  4. மூன்றாவது கோடு இரண்டாவது கோட்டை விட கொஞ்சம் பெரிசாவோ சிறிசாவோ இருக்கும். ஆனா இரண்டாவது கோட்டின் நிறத்துக்கு எதிர் நிறம்.
  5. நான்காவது கோடும் முதல் கோடும் ஒரே நிறம். முதல் கோட்டை விட நான்காவது கோடு சிறிது உயரம் குறைவாக இருக்கும்.
  6. அதனால மூன்றாவது நான்காவது கோடுகள் ஒரே நிறத்தில் இருக்கும்.



  • சில சென்ட்டுகள் வரவு வந்ததும் விற்று விடுவது நல்லது. இன்னும் வரவு வரும் என்று வைத்திருந்தால் நிலைமை மாறி நட்டம் வரும் வாய்ப்பு அதிகம்.
  • பொதுவாக பெரிய கோடு 70 சென்ட் என்றால் சராசரி கோட்டின் நீளம் 50 சென்ட்டாக இருக்கும்.
  • SL ஐ ஓய்வெடுக்கும் கோட்டுக்கு சில சென்ட் குறைவாக வைக்கவும்.





FAANG challenge

v

வியாழன், 5 செப்டம்பர், 2019

ஊசல் வணிகம் உத்தி -03 வரைபடம்

நாலு வரைபடத்தை வைத்து வாங்கி விற்பது.

இணை கோடு, கம்பத்திலுள்ள கொடி, பிடியோடு உள்ள கப், இரு முறை தரை தட்டல் என்ற நான்கு வகையான வரைபடம்.


எனக்கு பிடியோடு உள்ள கப்பும் கம்பத்திலுள்ள  கொடியும் தான் அதிக நம்பகத்தன்மை உள்ளதாக  தெரிகிறது. இருமுறை தரை தட்டல் நம்மை ஏமாத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது மூன்றுமுறை தரை தட்டலாக மாறலாம்  அது நமக்கு தெரியாது. பச்சை நிற கோடு தான் பிச்சிக்கிட்டு பங்கு விலை மேல போவதை காட்டுவது. மெல்லிய கருப்பு கோடு இந்த இடத்திலிருந்து பங்கு மேலே  போகும் என்பதை காட்டுவது.

இணை கோடுகள் சிறப்பானது என்றாலும் சரியாக ஆதரவு தடை கோடுகளை வரையனும் அப்ப தான் தடையை மீறி பங்கின் விலை செல்கிறதா என அறியமுடியும்.

மெல்லியதா கருப்பு கோடு கப்பிலும் கொடியிலும் போட்டிருக்கேன் இல்லையா அதை விட சில சென்ட்டு அதிகமா வைத்து வாங்க சொல்லி விட்டு  விடனும் அந்த அளவுக்கு மேல் வந்தா விலை  குறைந்தது சில நாள்களுக்கு ஏறும் என நம்பலாம் சில முறை நல்லா ஏறி பின் இறங்கும். அப்ப அப்ப SLஐ மேல ஏத்தி பாதுகாப்பா இருக்கனும்.


விலை பிச்சிக்கிட்டு போகும்(பச்சை கோடு)  போது Volume அதிகரிக்கும் ஏன்னா பில்லியன் கணக்கில் பணம் வைத்துள்ள Institutional buyer (Hedge fund, Mutual fund,Pension fund, ETF) நிறைய வாங்க ஆரம்பிப்பாங்க. அவங்களுக்கு தெரியும் எப்ப வாங்கனும் என்று. நாம அவங்கள விடாம  புடிச்சிக்கனும். அவங்க பணத்தை சும்மா வைத்திருக்க முடியாது அது நாம் பங்கை வாங்க சிறந்த நேரம். விற்பதும் அது போலவே.



ஊசல் வணிகம் இரு உத்திகள் இன்வெசுட்டோபீடியா


இன்வெசுட்டோபீடியா கூறியது
உத்தி 1
ஏழு நாள் இடைவெளி.
S&P 500 அல்லது Russel 2000 குறியீட்டில் உள்ள பங்குகளையோ அல்லது ETFஐ யோ எடுத்துக்கொள்ளுங்கல்.
200 எளிய நகரும் சராசரிக்கு (200 SMA) மேல் அப்பங்கு  இருக்க வேண்டும்.

ஏழு நாட்களில் மிகக் குறைவான விலை உள்ள அடுத்த நாள் சந்தை தொடங்கினதும் வாங்கி விட வேண்டும் .முதல் நாள் இரவே வாங்கு என்று வர்த்தகரிடம் (வணிக தளம் என்றால் அதனிடம்) ஆணை கொடுத்து விட வேண்டும்.

ஏழு நாள்களில்  என்று அதிகமான விலையில் முடிகிறதோ அதற்கு அடுத்த நாள் சந்தை தொடங்கினதும் விற்று விட வேண்டும் (முதல் நாள் இரவே விற்க என்று வர்த்தகரிடம் ஆணை கொடுத்தும விட வேண்டும்)

இந்த உத்தியின் வெற்றி 74.9% என்கிறார்கள்.
ஆண்டு சராசரி கிடைக்கும்  வருமானம்  8.92% வாங்கு வைத்திரு என்பதில் 7.23% தான் கிடைக்குதாம்.

  • Buy when close < Lowest (low, 7[-1] and close >MA(200)
  • Sell when close > Highest (close, 7 ) [-1] Note : it is Close not highest of high.
  • Stop Loss 20%
  • [-1] means 1 day ago 












உத்தி 2
முதல் நாள் முடிவில் இருந்து தள்ளி இடைவெளியுடன் அடுத்த நாள் தொடங்குவது.
Long, Short என்று இரண்டு உண்டு.
விலை ஏறும் என்று நினைத்து பங்கை வாங்கினால் அது  நெடுக்க (Long) வணிகம்.
விலை குறையும் என்று நினைத்து பங்கை வாங்கினால் (இல்லாத பங்கை விற்பது) அது  குறுக்க (short) வணிகம்

LONG - கீழ் இடைவெளி வந்தால் அடுத்த நாள் முந்தின நாள் கீழ் விலையில் வாங்கு.
SHORT - மேல் இடைவெளி வந்தால் அடுத்த நாள் முந்தின நாள் மேல் விலையில் வாங்கு (விற்க) அதாவது இல்லாத பங்கை விற்கவும்.

For Long and Short 20% என்பது STOP LOSS
வரவு வரும் முதல் வாய்ப்பில் விற்று வரவைப் பார்க்கவும்

இந்த உத்தியின் வெற்றி  90% இக்கும் மேல் என்கிறார்கள்.









புதன், 4 செப்டம்பர், 2019

ஊசல் வணிகம் - உத்தி 01


  1. ஒத்த நிறுவன வலிமையை பார்க்கனும் (Relative strength NOT RSI) விப்ரோ-இன்போசிசு எக்சான்-செவ்ரான் வால்மார்ட்-டார்கெட் எந்த நிறுவனத்தோட ஒப்பிடறதுன்னு தெரியலையா S&P 500 குறியீடு (Index)  SPX அல்லது துறை குறியீடு Index அல்லது துறை ETF உடன் ஒப்பிடவும்.impactopia.com/ என்ற தளத்தை ஒத்த நிறுவன வலிமை  பங்குகளை அதாவது correlation  உள்ள பங்குகளை அறிய பயன்படுத்தலாம். இது இலவச தளம்.
  2. வாரத்தில் ஐந்து பங்களைம வாங்குனா எல்லா பங்குகளும் ஒரு துறையை சார்ந்ததா இருக்கக்கூடாது. 
  3. உந்தம் (Momentum) உள்ள பங்கைதான் வாங்கனும், 
  4. பொதுவா நெடுக்கம் Long தான் நன்கு அறிந்தால் குறுக்கமும் Short செய்யலாம் 



  • ஒரு வழிமுறை அல்லது விதியை உருவாக்கி வரவோ நட்டமோ அந்த விதிப்படி தான் வணிகம் செய்யனும், உணர்ச்சி வசப்படுதலை இது கட்டுக்குள் வைக்கும், வணிகத்தில் உணர்ச்சி வசப்படுதல் எதிரி. அதுவும் பங்கு வணிகத்தில் மூச். 
  • Stop-Loss ஐ பங்கை வாங்கும் போதே போட்டு விடனும். பங்கின் விலை  குறைந்தால் நம் நட்டத்தை அது குறைக்கும். அதை செய்யாம பங்கு விலை ஏறும் என்று காத்திருப்பது சிறந்த உத்தி அல்ல. இதனால தான் விதியை வகுத்து அதன் படி செயல்படனும்
  • எல்லா வணிகமும் வரவு அளிக்காது சில நட்டமாகக்கூடும், நட்டம் ஏற்பட்டால் துவண்டு விடக்கூடாது.
  • இது நுட்ப அலசல் மற்றும் வரைபடத்தை வைத்து முடிவெடுக்கப்படுவது.  அடிப்படை அலசல் இதற்கு தேவையில்லை


ஏகப்பட்ட உத்திகள் உள்ளது தெரிந்தவரை பகிர்கிறேன்.

IBD information to Buy to Sell etc

 எhttps://www.investors.com/how-to-invest/when-to-sell-stocks/   When to sell stocks. https://www.investors.com/how-to-invest/how-to-buy-sto...