நாள் பூரா உட்கார்ந்து கணினிய (பங்கின் போக்கை) பார்த்து வாங்கனும் விற்கனும் என்ற தேவை இல்லை. காலையில் சந்தை திறந்ததும் 30 நிமிடம் இல்லைன்னா 1 மணி நேரம்.
BAR - கோடு
மூன்று கோட்டு உத்தி.
- முதல் கோடு பெரிய பச்சை அல்லது சிவப்பு
- இரண்டாவது சிறிய கோடு முதல் கோட்டு நிறத்துக்கு எதிர் நிறம். முதல் கோட்டின் பாதி அளவு கூட இது இருக்கக்கூடாது. இதை ஓய்வெடுக்கும் கோடு என்பார்கள்.
- மூன்றாவது கோடு முதல் கோட்டை விட கொஞ்சம் சிறியது. ஆனா முதல் கோட்டின் நிறமுடையது.
நான்கு கோட்டு உத்தி
- இதுக்கு இரு ஓய்வெடுக்கும் கோடுகள் இருக்கும். அவை இரண்டாவது மற்றும் மூன்றாவது கோடுகள்.
- முதல் கோடு பெரிய பச்சை அல்லது சிவப்பு.
- இரண்டாவது சிறிய கோடு முதல் கோட்டு நிறத்துக்கு எதிர் நிறம். முதல் கோட்டின் பாதி அளவு கூட இது இருக்கக்கூடாது. இதை ஓய்வெடுக்கும் கோடு என்பார்கள்.
- மூன்றாவது கோடு இரண்டாவது கோட்டை விட கொஞ்சம் பெரிசாவோ சிறிசாவோ இருக்கும். ஆனா இரண்டாவது கோட்டின் நிறத்துக்கு எதிர் நிறம்.
- நான்காவது கோடும் முதல் கோடும் ஒரே நிறம். முதல் கோட்டை விட நான்காவது கோடு சிறிது உயரம் குறைவாக இருக்கும்.
- அதனால மூன்றாவது நான்காவது கோடுகள் ஒரே நிறத்தில் இருக்கும்.
- சில சென்ட்டுகள் வரவு வந்ததும் விற்று விடுவது நல்லது. இன்னும் வரவு வரும் என்று வைத்திருந்தால் நிலைமை மாறி நட்டம் வரும் வாய்ப்பு அதிகம்.
- பொதுவாக பெரிய கோடு 70 சென்ட் என்றால் சராசரி கோட்டின் நீளம் 50 சென்ட்டாக இருக்கும்.
- SL ஐ ஓய்வெடுக்கும் கோட்டுக்கு சில சென்ட் குறைவாக வைக்கவும்.
FAANG challenge
v
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக