சனி, 14 செப்டம்பர், 2019

இதுவரை நான் புரிந்தது

புதிதாக ஏதாவது கற்றால் இந்த இடுகை இற்றைபடுத்தப் படும், அதனால் இது முழுமையானது அல்ல.
  • நமக்கும்  புரியும்படியான சில காட்டிகள்  போதும். எல்லா காட்டிகளும் ஏதோ ஒரு வகையில் சிறந்தவையே.
  • 2 அல்லது 3 காட்டிகளை தேர்ந்தெடுத்து அதையே எப்போதும் பயன்படுத்துங்கள். நிறைய காட்டிகள் குழப்பத்தை தான் தரும்.
  • ஏதாவது ஒரு உத்தி வகுத்துக்கொண்டு அதை மட்டும் பயன்படுத்துங்கள். இது சரியில்லையென்றால் வேறு உத்தி.
  • எத்தனை காட்டிகள் உத்திகள் என்றாலும் எல்லாம் எப்போதும் வெற்றி கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • Equityஇக்கு பதிலாக Commission இல்லா ETF ஐ பயன்படுத்துங்கள். 50, 100, 500 பங்குகளை வர்த்தகம் செய்தால் Commission மிச்சம் ஆகும் . அது பெரிய தொகை.
  • இரு வரைபட ஒழுங்கு பலனலளிக்கிறது. மற்றவற்றை பரவாயில்லை பிடியோடு உள்ள கப்பும் கம்பித்தில் உள்ள கொடியும் மற்றவற்றை விட சிறந்தது.
  • நாள் வணிகத்திற்கு VWAP and 7 or 9 EMA சிறந்தது
  •  SL என்பதை பங்கு வாங்கும் போதேபோட்டு விடனும். அது பாதிப்பை குறைக்கும். விலை ஏறினா  SLஐ அதிகப்படுத்தி விடனும்.
  • எத்தனை வணிகம் வெற்றி என பாருங்கள் எவ்வளவு லாபம் என மட்டும் பார்க்காதிர்.
  • உந்தத்திற்கு எதிராக வணிகம் புரிவது சிறந்தது அல்ல. 
  • வார இறுதியிலோ இரவு நேரத்திலோ வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் உலக நிகழ்வுகள் நடந்தால் அடுத்த நாள் அது பங்கு சந்தையில் எதிரொளிக்கும்.
  • உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டில்  5-6% மட்டும் ஒரு பங்கில் போடுங்கள் அதற்கு அதிகம் வேண்டாம். 2-3% சிறந்தது பங்கின் விலை குறைவாக இருந்தால்.
  • எந்தப்பங்கும் எப்போதும் மேல போய்க்கிட்டே இருக்காது, விற்று லாபத்தை எடுத்து நேரம் பார்த்து மீண்டும் வாங்குங்கள். எப்ப விற்பது என்பது கடினம் அதற்கு ஏதாவது விதியை வகுத்து பின்பற்றுங்கள்.
  • பங்குகள் பாண்ட்களுக்கு எதிராக தான் செல்லும்.  அதாவது பங்கு கீழ போனா பாண்டு மேல போகும்.
  • Dollar cost averaging என்னும் முறைப்படி மாதம் ஆனதும் ஒரு பங்கிலோ அல்லது இரு பங்கிலோ பணத்தை போடுங்கள் பங்கு மெதுவாக வளரும். சிறந்த Commission இல்லா ETF ஐ தேர்ந்தெடுத்து பணத்தை போடவும். இது சிறந்த பாதுகாப்பு அதிகமுள்ள முறை.
  • உங்கள் பங்கை 30 பங்குகள் DOW உள்ள குறியீட்டுடன் ஒப்பிடாமல் S&P 500 குறியீட்டுடனோ  NYSE குறியீட்டுடனோ ஒப்பிடவும்.NASDAQ  குறியீட்டுடன் வேண்டாம் ஏனென்றால் அது விலையில் அதிக ஏற்றத்தாழ்வு உடைய தொழில் நுட்ப பங்குகள் அதிகம் உள்ளது.
  • அதிகமாக வெப்பினாரில்  பயன்படுத்தப்படும் காட்டிகள் வேற எதுவும் காட்டப்படுவதில்லை என்றே கூறலாம். எல்லாமே உந்த காட்டிகள் தான்.
    • WILLIAN  %R
    • RSI
    • VORTEX
    • MACD
    • STOCHASTIC FULL OR SLOW
    • SMA
    • EMA
    • SL (Stop Loss) இக்காக ATR.
  •  விலைக்கும் காட்டிக்கும் இடையே Divergence இருந்தால் விரைவில் விலையின் போக்கு மாறும் என 95% கூறலாம். விலை கீழே போய்க்கிட்டு இருக்கும் போது காட்டி மேலே போனால். அதாவது விலையும் காட்டியும் மாறுபட்ட எதிர்எதிர் திசையில் விரிவாங்கி சென்றால்.
  • 1-2-3 உத்தியை பயன்படுத்தவும்
  • பிடியோடு உள்ள கப் , கம்பத்தில் பறக்கும் கொடி  உத்தியை பயன்படுத்தவும்
  • வலேகலா உத்தி நன்றாக உள்ளது.
  • 5 அல்லது 10 என்று முடிந்த வரை குறைவ்வான பங்குகளில்  கவனம் செலுத்துங்கள். நிறைய பங்குகளில் கவனம் போனால் கவனம் சிதறி எதையும் ஒழுங்காக கவனிக்கமாட்டோம்.
  • உந்தம் உள்ள நல்ல நிறுவன பங்குகளை  வாங்கி,  SL போட்டு விட்டு மாதம் ஒரு முறை அதை பார்த்தால் போதும்.
  • நிறுவனத்தின்  வரவு-செலவை அறிவிக்கும் முன்பு நிறுவனத்தின் பெரிய தலைகள் 1 வாரத்துக்குள் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறார்களா விற்கிறார்களா என பார்க்கவும். அப்படி நடந்தால் அது வரவு-செலவை அறிவித்த பின் பங்கின் விலை  எந்த திசையில் போகும் என்பதை உணர்த்தும்.
  • பங்கின் கொள்ளளவு எப்படி உள்ளது என பார்க்கவும், வாங்கல் அதிகமுள்ளதா விற்றல் அதிமுள்ளதா என பார்க்கவும், இது சிவப்பு பச்சை நிறத்தில் கொள்ளளவு குச்சியின் நிறம் உள்ளதை வைத்து அறியலாம். குச்சியின் நீளம் அதிகமிருந்தால் பெரும் முதலைகள் (Billion dollar hedge funds & pension funds) வாங்கியுள்ளன விற்றுள்ளன என அறியலாம். ஏனென்றால் பெரும்பாலான பெரு பண்டு நிறுவனங்கள் கணினி மயப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காட்டிகள் குறிப்பிட்ட இடத்தில் வந்தால் வாங்கு விற்க என நிரல் அடிப்படையில் செயல்படுகின்றன. 
  • உங்கள் விதிகள் அதாவது காட்டிகள் மதிப்பு இருக்கும் நிலை உள்ள கவனிப்பு பட்டியலை Check List உருவாக்கி கொள்ளுங்கள் அந்த நிபந்தனைகள்\விதிகள் காட்டிகள் மதிப்பு இருக்கும் நிலை எதிர்பார்த்த மாதிரி சரியாக இருந்தால் மட்டும் பங்கை வாங்கவும். 

BIG MOVES LOWER ODDS
SMALL MOVES BIG ODDS
Don't wait for long time,. get-out in few hours or days.



l

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IBD information to Buy to Sell etc

 எhttps://www.investors.com/how-to-invest/when-to-sell-stocks/   When to sell stocks. https://www.investors.com/how-to-invest/how-to-buy-sto...